தோற்காதான் குல மாவீரன் கட்டுத்தடிக்காரன் கொங்கு குணாளன் நாடார்
தோற்காத குணம் கொண்ட குணாளன் நாடார் என்ற போர்புலியின் வீரவரலாறு!
காரையூர் என்றழைக்கப்பட்ட நத்தக்காடையூரில்(நொய்யல் ஆற்றங்கரைக்கு அருகில் இருந்த காரையூர்)
கி பி 1757 ஆண்டு ஜனவரி 18 (தை 5)ஆம் தேதி முத்தப்பன் காளியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர்.
இவர் கொங்குநாடார் தோற்காதான் குலத்தில் பிறந்தவர்.இவருக்கு கருப்பாத்தால் என்ற தங்கையும் உண்டு.தங்கையை ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் உள்ள காட்டுப்பாளையம் என்றழைக்கப்பட்ட நத்தக்காட்டுப்பாளையத்திற்கு மணமுடித்துக்கொடுத்தனர்.
குணாளன் சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்று மிக்கவர்.ஆங்கிலேய ஆதிக்கத்தில் நாடு இருந்தபோது கும்பினி என்ற வெள்ளைக்காரர்கள் மக்களை மிரட்டி வரி வாங்கிக் கொள்வதும்,மக்களை கட்டி வைத்து அடிப்பதையும் வாழக்கமாக கொண்டிருந்தார்கள்.சிறு வயதிலிருந்தே இந்தக்கொடுமைகளை பார்த்து வளர்ந்த குணாளன் விடுதலை தீயை தனக்குள் மூட்டிக்கொண்டார்.
குணாளனும் அவரது தோழர்களும் வீரமுத்து ஆசானிடம் கல்வியுடன் வாள் பயிற்சி,குதிரையேற்றம்,மற்போர்,சிலம்பாட்டம்,வர்மக்கலை போன்ற கலைகளை கற்று தேரியவர்.இவர் கொங்கு தேசத்தில் பிறந்ததால் கொங்கு குணாளன் என்றழைக்கப்பட்டார்.வெள்ளைகாரர்களுக்கு ஒற்றன் வேலை பார்த்த சுப்பான்,கிட்டான் ஆகிய இருவரது தலைகளும் குணாளனின் வாளுக்கு இரையானது.குணாளன் கும்பினியாட்களுக்கு எதிராக போராடியதால் குருகுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இவரை தொடர்ந்து சின்னமலையும் வெளியேறினார்.இவர்கள் இருவரும் ஒரேவயதினர்.குணாளன் தனது கிராமத்து இளைஞர்களை திரட்டி போர் பயிற்சி கொடுத்தார்.குணாளனின் செல்வாக்கும் புகழும் கொங்கு தேசமெங்கும் பரவியது.
ஐதர் அலி படைகளுக்கும்,
கும்பினி படைகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார்.
கொங்கு மண்ணை கொள்ளையடிக்க வந்த இரு படைகளாலும் கொங்கை தாண்டி செல்லமுடியவில்லை தனது போர்பயிற்சியால் குணாளனின் தடிக்கார படை தினறடித்தது.ஜதர்அலி சித்தூரில் கேன்சரால் மரணமடைந்தார்.அவரது மகன் திப்பு சுல்தான் மைசூருக்கு அரசராக பதவியேற்றார்.கொங்கு படையுடன் சமாதானமாக போக விரும்பினார்.திப்பு மேற்கொண்ட சமாதான உடன்படிக்கையின் காரணமாக கொங்கு குணாளன்நாடார்,தீர்த்தகிரிசகோதரர்கள்,கருப்பு சேர்வை மற்றும் சென்னியப்ப நாடார் ஆகியோர் ஆலோசித்து திப்புவுடன் இனைந்து வெள்ளையனை எதிர்த்தார்கள்.கொங்கு படைவீரர்கள் மீதும் குணாளன் மீதும் திப்புவிற்கு நம்பிக்கை இருந்தது.
குணாளன் போர் தந்திரங்களை திப்பு சுல்தான் கண்டு வியந்தார்.,1804 ஆம்ஆண்டு அரச்சலூர் ஓடாநிலையில் நடந்த போரில் குணாளன் கருப்பு சேர்வை மற்றும் தீர்த்தகிரி போண்ற கொங்கு படை தளபதிகளாலும்,கட்டுத்தடி வீரர்களாலும்,வெற்றியடைந்தனர்.ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களை எதிர்க்க கருமலைக்காட்டிற்
குள் இரகசியமாக பதுங்கி பாய திட்டம் தீட்டினார்கள்.குணாளனுக்கு மறைந்து வாழ விருப்பமில்லை. எனினும் தன் நன்பன்
தீரன் சின்னமலையை காப்பதற்காகவே இதற்கு சம்மதித்தார்.தீரனின் மெய்காப்பளராக செயள்பட்டார் குணாளன் நாடார்.
"கட்டுத்தடிக்காரன்" முன்னடக்க
அவன் கருப்பு சேர்வையும் பின்னடக்க
வட்ட பொட்டுக்கார சின்னமலை வார சவுரியம் பாருங்கடி!
என்ற கும்மி பாடல் இன்றளவும் பாடப்படுகிறது.இதில் கட்டுத்தடிக்காரன் என்று குறிக்கப்படுவர் கொங்கு குணாளன்நாடார் ஆவார்.இறுதியாக நல்லப்பன் என்ற சமையல்காரணால் கும்பினி படைக்கு காட்டிக் கொடுக்கப்பட்டு கொங்கு படை தளபதிகள் மற்றும் கொங்கு குணாளன் நாடார் சங்ககிரி மலை கோட்டையில் தூக்குமேடையில்
1805 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31(ஆடி 18) நாள் தூக்கிலிடப்பட்டார்கள்.தனது வாழ்முழுவதும் கொங்கு மண்ணின் விடுதலைக்கு அற்பனித்த குணாளன் நாடாரின் வீர வரலாறு போற்றத்தக்கது.
Comments
Post a Comment