கொங்கு குணாளன் நாடார்
கட்டுத்தடிக்காரன் "
கொங்கு. மு.குணாளன் நாடார் வீரவரலாற்றில் விடுபட்ட தகவல்குறிப்பு குணாளன் நாடார் வரலாற்றை "தினத்தந்தி" நாளிதழ் மூலம் இவ்வுலகிற்கு முதன் முதலில் அறிமுகபடுத்திய மேட்டுக்கடை துரைசாமி அவர்கள் வாயிலாக கேட்டறிந்த வரலாற்று தகவல்.
கொங்கு குணாளன் நாடாரின்
ஆதி குலதெய்வம் :
சென்னிமலை சுப்ரமணிய சுவாமி
கொங்கு குணாளன் நாடாரின் குலம் :
கொங்கு நாடார் (தோக்காதான் கூட்டம்).
கொங்கு குணாளன் நாடாரின் தங்கை
கருப்பாத்தாள் மணமுடித்து கொடுத்த
குலம் : கொங்கு நாடார் (பெரிச்சி கூட்டம்)
கருப்பாத்தாள் குலதெய்வம்:
வெள்ளோடு கருக்கு அண்ணன்மார் சுவாமிகள்.
கொங்கு குணாளன் நாடார் சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்படுவதற்கு முன்பே அவரது வம்சாவளிகள் மற்றும் குலப்பங்காளிகள் வெள்ளையர்களால் கடும் சித்ரவதைக்கு ஆளாகி அன்றைய காங்கேய நாட்டை விட்டு வெளியேறி பூந்துறை நாட்டிற்கு புலம் பெயர்ந்து அவினாசி மற்றும் நம்பியூர் பகுதிகளில் தஞ்சம் அடைந்து விட்டார்கள். கொங்கு குணாளன் நாடார் பங்கு கொண்ட எந்த போரிலும் தோற்காததால் கொங்கு குணாளன் நாடாரின் பங்காளிகளும் தோற்காதான் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர்.இன்றும் கொங்கு குணாளன் நாடாரின் வம்சாவளி பங்காளிகள் தாங்கள் அதிகம் வசிக்கும் நம்பியூர் எலத்தூரில்
முருகப்பெருமான் ஆலயம் ஒன்றை கட்டியெழுப்பி அந்த ஆலயத்திற்கு
அனை குமார சுவாமி திருக்கோவில் என்று பெயரிட்டு இன்றளவும் வணங்கி வருகிறார்கள்.
(மறைக்கப்பட்ட மாவீரன் வரலாற்றை வெளிகொண்டுவர உதவிய சமுதாய உறவுகளுக்கு நன்றி!!!)
Comments
Post a Comment