கொங்கு குணாளன் நாடார்

கொங்கு குணளான் நாடார் வரலாறு

வரலாறு 





மறந்து விட்ட ஒரு மாவீரனின் வரலாறு

யார் இவரென்று இன்றைய சமுதாயத்தில்

உள்ளவர்களிடம் கேட்டால்பதில் சொல்லத் தெரியாது.


அவன் மறக்கக் கூடியவனா? இல்லவே இல்லை.


நாட்டுக்காகவும், நட்புக்காகவும்

தூக்குக்கயிற்றை முத்தமிட்ட கொங்கு நாட்டுச் சிங்கம் அவன்.





சின்னமலை என்று அழைக்கப்பட்டதீர்த்தகிரியைப் பற்றி அனைவரும் அறிவார்கள் ஆனால் அவனுடைய சேனாதிபதிகளாகவும்,

மெய்க்காப்பாளர்களாகவும் விளங்கிய

அவருடைய உயிர் தோழர்கள் கருப்புசேர்வை குணாளன் பற்றி அறிந்தவர்கள் வெகு சிலரே




கிபி1757-ம் ஆண்டு அப்போது"காரையூர் என்றழைக்கப்பட்ட நத்தக்காடையூரில் முத்தப்பன், காளியம்மாள்தம்பதிகளுக்குப் பிறந்தவன் குணாளன்

பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் அவனைப் பற்றி குணசீலன் என்றும், குலசேகரன் என்றும், குணசேகரன் என்றும் எழுதுவதும் உண்டு

கொங்கு நாடார் குலத்தில் பிறந்தவன்



ஒரே தங்கை கருப்பாத்தாள் பிற்பவு

தில் காட்டுப்பாளையத்திற்கு மணமுடிச்

துக் கொடுத்தார்கள். அவருடைய

வம்சாவளியினர் இன்னும் எவ்விதமான

ஆர்ப்பாட்டமும்

அமைதியாக வாழ்கிறார்கள்.




குணாளன் கருப்ப சேர்லை. தீர்த்த கி

யின் அண்ணன் குழந்தைசாமி அவரு

டைய தம்பிகள் பெரியதம்பி மற்றும் 

குட்டிசாமி ஆகியோர் வீரமுத்து

என்ற ஒரு ஆசிரியரிடம்தான்

தடிவீச்சு, சிலம்பாட்டம், மற்போர்

ஈட்டி எறிதல், வாள்வீச்சு, மற்றும்

துப்பாக்கி பயிற்சி பெற்றனர்.


வீரமுத்து வீர விளையாட்டு மட்டு

மின்றி தமிழ் பாடமும் நடத்தி

அவர்களைப் புலமை மிக்கவர்களாகமாற்றினார். 


தீர்த்தகிரியின் அண்ணன்

 குழந்தைசாமியும், கடைசித்தம்பி

 குட்டிசாமியம் திருமணம் செய்து கொண்டு

 நில புலன்களை கவளித்த போது

தீர்த்த கிரியும், அவருடைய இரண்டு தம்பிகளும்தங்களுக்குத் திருமணம் தேவையில்லை என்று சொல்லிவிட்டு

நாட்டு விடுதலை ஒன்றே தங்கள்குறிக்

 கோள் என்று இருந்து விட்டார்கள்


தீர்த்தகிரியும், குணாளனும் ஒரே

வார்கள் வயதினர் ஆகவேதான் நண்பளைப்போலவே தனக்கும் திருமணம் வேன்டாம்என்று முடிவு செய்து விட்டு நாட்டு விடுதலை தனது குறிக்கோள் என்று இருந்து விட்டவன்

அதேபோல கருப்பு சேர்வையும்

  தனக்குத் திருமணம் வேன்டாம்என்று சொல்லிவிட்டவன்.



கொஞ்சம்கொஞ்சமாகநண்பர்களின்

வீரசாகச விளையாட்டுக்கள் பட்டிதெட்டியெல்லாம்

பரவ ஆரமித்தன மேலும் தீர்த்தகிரியின் வீரமிக்க பேச்சு கொங்கு இளைஞர்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. 


வந்தேறிகளான வெள்ளையர்களுக்கு கப்பம் கட்டுவதை அதன் பொருட்டு கொங்கு நாட்டில் வரி வசூலிப்பதையும் தடுத்து நிறுத்தஎண்ணினான் தீர்த்தகிரியின் வீரமுழக்கத்தால் கவரப்பட்டு வரும் இளைஞர் கூட்டத்தை 

குணாளனும், கருப்பசேர்வையும்

போர்ப்பயிற்சி கொடுத்து போர்வீரர்களாக மாற்றினார்கள்.


குணாளன் எப்போதும் சேனைத்தலைவனுக்குரிய கரியதடியினை கையில் 

வைத்திருப்பான் அதில் தங்கம் மற்றும்

வெள்ளியால் செய்யப்பட்ட அழகிய பட்டைகளைச் செய்து அழகுபடுத்தியிருப்பான்அந்தத்

தடியுடன்தான் குணாளனை எப்போதும் பார்க்க முடியும்.அதனால் அவரை கட்டுத்தடிக்காரன் என்று அழைப்பார்கள்.


பிற்காலத்தில் தீர்த்தகிரி சின்னமலை என்ற பட்டப் பெயருடன் ஓடாநிலையில் அரன்மனை கட்டிய போது குணாளனும், கருப்பசேர்வையும் அவனுடைய சேனாதிபதியாகவும்,மெய்க்காப்பாளர்களாகவும் ஆயினர்.


எங்கு சென்றாலும் அவர்கள் முவரும்ஒன்றாகவே செல்வார்கள் அதுவும் கட்டுத்தடிக்கார குணாளன் முன்பாகச் செல்வான். நடுவில் சின்னமலை பிறகு கருப்ப சேர்வை செல்வான்



இதையே அழகாக

யும், கட்டுத்தடிக்காரன் முன்னடக்க உடன் கருப்பு சேர்வையும் பின்னடக்க

 வட்டப் பொட்டுக்காரச் சின்னமலை

 அதோ வாராச் சவுரியம் பாருங்கடி

என்று கும்மிப்பாட்டில் பாடுவார்கள்



ஒருமுறை கொங்கு நாட்டில் வரி

வசூலித்துக் கொண்டு, கப்பப்பணத்துடன்சென்ற வீரர்களை தீர்த்தகிரி சென்னிமலை அருகே மடக்கிப் பிடித்து, கப்பம்

 பணத்தைக் கைப்பற்றியதும், பணிந்து

 கேட்ட வீரர்களிடம் சென்னிமலைக்கும்

 சிவன்மலைக்கும் நடுவே உள்ள சின்னமலை வாங்கிக் கொண்டாள் என்ற

சொல் என்று வீரமுழக்க மிட்டார்தீர்த்தகிரி சின்னமலை என்பதுவரலாறு,


 கிபி1782-ல் மைசூரில் அலி இறந்த

 திப்புசுல்தான் அரியனை ஏறினான்.

தீரன் சின்னமலையின் கொங்கு நாட்டுப் படை பற்றி கேள்விப்பட்டு

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட சின்னமலையின் உதவி நாடினார்கள் சின்னமலையும் தளதுசேனாதிபதிகள்

குணாளன், கருப்பசேர்வை பெரியதம்பிசெல்வான். கிலேதார் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து


கொங்கு நாட்டில் வசித்து அனைத்து

ஜாதி இளைஞர்கள் கொண்ட கொங்கு

படையை உருவாக்கி தலைமையேற்று

ஸ்ரீரங்கப்பட்டணம் சென்றான்.


குணாளனும் ஸ்ரீரங்கப்பட்டணம் சென்று திப்புசுல்தான் படையில் சேர்ந்து பல போர்க்களங்களைக் கண்டனர்.



அவர்களுக்குப் பஞ்சு படையினர் பீரங்கித் தாக்குதல்கள், கொரில்லாப் போர் முறைகளைக் கற்பித்தனர் கிபி.1799-ம் போரில் திப்பு சுல்தான் வீர மரணமடைந்ததை அடுத்து கொங்குபடையினர் ஊர் திரும்ப முடிவெடுத்து ஊர் திரும்பினர்.


பின்னர் சின்னமலை ஓடாநிலையில் பலம் வாய்ந்த அரண்மளை கட்டிய போது குணாளனும், கருப்பசேர்வையும் காவிரிக் கரையிலும் அமராவதிக் கரையிலும்

படைகளை நிலை கொண்டு கொங்குநாட்டைக்காவல் காத்தனர்.

அவர்களை அறியாமல் ஒரு ஈ, எறும்பு கூடநாட்டில் நுழைய முடியாவண்ணம் திறம்பட தங்கள் கடமையைச் செய்தனர்.

பின்னாளில் ஆங்கிலப்படை ஓடாநிலையில் உள்ள சின்னமலை கோட்டையைமுற்றுகையிட்ட 

புறக்கணித்து மறைந்திருந்துஎதிரிகளைத் தாக்கி வீழ்த்தலாம்என்றுவியூகம்அமைத்தபோது குணாளன் கருப்ப சேர்வை மற்றும் சின்னமலை

 தம்பிகள் பெரியதம்பி சிலேதார் ஆகியோர் செத்தாலும் அரண்மளையைகாப்பதில் சாவோம். அரண்மனையை

 விட்டுச் செல்ல வேண்டாம் என்று மன்றாடியதாகவும், கடைசியில் சொல்லைத் தட்டாமல் கருமலைக் காட்டில் ஒளிந்து வாழ்ந்ததாகவும், ஒரு

வரலாறு உண்டு.



கடைசியாக கருமலைக் காட்டில் சொந்தச்சமையல்காரனால் காட்டிக்

 கொடுக்கப்பட்டுகைவிலங்கிடப்பட்டு

சங்ககிரிகொண்டு போகும்போது

"போரில் வீரமரணம். அடையாததை

 எண்ணி ஐவரும் கலங்கியதாக வரலாறு.


கடைசியாக கிபி 1805ம் ஆண்டு

 ஆடி மாதம் 18ம் தேதி சின்னமலை,

 குணாளன். கருப்பசேர்லை. பெரியதம்பி

 கிலேதார் மற்றும் அவர்களுடன்

 அவர்களை கருமலைக் காட்டில் கைது செய்யப்பட்ட கொங்கு சுமார் 10கொங்குபடை வீரர்கள் சங்ககிரிக்

கோட்டையில் தூக்கிலிடப் பட்டனர்.


கொங்குநாட்டில், நாடார் குலத்தில்

 பிறந்த அந்த வீரச் சிங்கம், நாட்டுக்

 காகவும், நட்புக்காவும் தன் இன்னுயிரை மாய்த்து மாவீரனை நினைவூட்டி பெருமை கொள்கிறோம் 
 

Comments

Popular posts from this blog

KONGU KUNALAN NADAR HISTORY

கொங்கு குணாளன் நாடார் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா