கொங்கு குணாளன் நாடார் அவர்களின் ஆடிப்பதினெட்டு 218 ஆம் ஆண்டு வீரவணக்கம்
தீராத பகை முடிக்க !
ஆறாத சீனம் துடிக்க!
மாறாத வீரம் வடிக்க!
பாராத படை மிடுக்க!
பராக்ரம பவனி வரும் படைத்தலைவன் !
கொங்குநாட்டு மக்கள் துயர்துடைக்க!
கும்பினி படையை தினறடிக்க!
ஆறடி சினப்புலி சீறிஎழுந்து முன் பாயும்!
கட்டுத்தடிப் படை திரண்டெழுந்து பின் பாயும்!
எதிர்படை வாள் ஏந்தும் நொடிப்பொழுதில்!
தடி கொண்டு கயவர்கள் கதை முடிக்கும் "கட்டுத்தடிக்காரன் "
கொங்குதேச மக்களின் பூர்வகுடி நேசன்!
வெள்ளையனை காத்திருந்து கருவறுக்கும் கரும்பனை வாசன்!
வருடிச்செல்லும் காற்றுக்கும் வரி விதித்து
திருடிச்செல்லும் கொள்ளை கூட்டம் !
குணாளன் குரல் கேட்டால் அலறி கதறி ஓட்டம் பிடிக்கும்!
பாமரனுக்கும் வில் ,வாள்,வளரி,சிலம்பு பயிற்சியளித்து படைவீரனாக்கிய
"போர்கலை ஆசான்"
பகையின் வேர் தேடிச் சென்று நறுக்கும் நாடார்குலமகன்!
தனது தன்னெழுச்சியான பேச்சால் கொங்குநாட்டு இளைஞர்கள் மனதில்
தாயகத் தீ மூட்டிய
"விடுதலை பெருநெருப்பு"
கொங்குதேச விடுதலைக்கு
தூக்கு கயிற்றை முத்தமிட்ட
மாவீரன்
"கட்டுத்தடிக்காரன் "
கொங்கு குணாளன் நாடார் -ன்
218 வது வீரவழிபாடு விழாவிற்கு "கொங்குநாட்டு தளபதியார்"
திரு.பொன்.விஸ்வநாதன் நாடார் தலைமையில் அணிவகுத்து
அலைகடலென திரண்டெழுந்து
ஆர்பரித்து வாரீர்!
நாடார்குல உறவுகளே!
இடம் :வெள்ளோடு,அண்ணன்மார் திருமன மண்டபம்,அறச்சலூர் ரோடு.
தேதி :ஆடி 18 (03.08.2023)
260 ஆண்டுகளாய் மறைக்கப்பட்ட மாவீரன் வரலாறு மீண்டு எழட்டும்.
இவன்.
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.
Comments
Post a Comment