கொங்கு குணாளன் நாடார் ஆடி 18 218ம் ஆண்டு வீரவணக்கம்
கொங்குதேசத்தின் அடிமை விளங்கறுத்து!
வரி வாங்கி பிழைக்கும் வெள்ளைக்கார ஓநாய்களின் வால் நறுக்கிய வாள் வேந்தன்!!!
தேசத்தின் விடுதலைக்கு சாமத் துயில் கொள்ளா சரித்திரநாயகன்!
தடிக்கார படைத்தலைவன் தடிகண்டு "கட்டுத்தடி" கண்டு பகைவர் கூட்டம் பதறி துடிக்கும்!
இரத்த வாடை அறியா இளம் யுவன்களை சத்தமிட்டு மெருகேற்றி வாள்பயிற்சியளித்து
கத்தியுடன் யுத்தம் செய்த
புத்தியுள்ள சான்றோர்குல புத்திரன்!
பகைவர்களின் தொலைதூர படை கான பனையேறி படுத்து
உறங்கும் "பனைப்புலி"
எதிரிகள் நடமாட்டத்தை கண்ணின் கருவிழி ஓட்டத்தால் காப்பாளர் கண்டறியும் சமிக்கை விடும்
"கட்டுத்தடிக்காரன்".
எங்கள் மாவீரன் "குணாளன்" சத்தம்கேட்டால் ஆர்பரித்து கொதித்து எழும் ஆழ்கடலும் அடங்கி கிடக்கும்.
ஆடிப்பெருக்கின் ஆக்ரோச பெரும்புயல்!
அரைக்கோடி நாடார்களின் அழிவில்லா செப்பேடு!
கொங்கு சரித்திரத்தின் வரலாற்று மெழுகுவர்த்தி
எங்கள் சான்றோர்குல சக்கரவர்த்தி!
"கட்டுத்தடிக்காரன்"
கொங்கு குணாளன் நாடார் அவர்களின் ஆடி18
218ஆம் ஆண்டின் நினைஞ்சலி புகழ்பாடுவோம்.
Comments
Post a Comment